ADDED : ஜூன் 16, 2025 02:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்:காஞ்சிபுரம் மாவட்டம், சேர்பணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 30 நேற்று காலை 8:00 மணிக்கு தனது புல்லட் இருசக்கர வாகனத்தில் சித்தாமூரில் இருந்து சூணாம்பேடு நோக்கி சென்றார்.
கொல்லத்தநல்லுார் அருகே சென்றபோது, காட்டுப்பகுதியில் இருசக்கரவாகனத்தின் மீது மயில் மோதியது, இதில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயிலும் உயிரிழந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார், பிரபாகரன் உடலை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். இறந்த மயிலை அச்சிறுப்பாக்கம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.