/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி' பயிற்சி விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

ADDED : ஏப் 13, 2025 08:32 PM
செங்கல்பட்டு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, 'டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி' மற்றும் துணியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 'டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி' மற்றும் துணியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்க உள்ளன.
இந்த பயிற்சியில் சேர 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 30 நாட்கள். இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு, இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால், அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சிக்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.