/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இளைஞர் நீதி குழுமம் செங்கையில் துவக்கம்
/
இளைஞர் நீதி குழுமம் செங்கையில் துவக்கம்
ADDED : ஆக 26, 2025 10:35 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், இளைஞர் நீதி குழுமம் துவக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நிர்வாகம் கட்டுப்பாட்டில், செங்கல்பட்டில் இளைஞர் நீதி குழுமம் இயங்கி வருகிறது. இங்கு கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் வழக்குகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களின் எல்லைகள், கடந்தாண்டு பிரிக்கப்பட்டன. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இளைஞர் நீதி குழுமம் தனியாக அமைக்க வேண்டுமென அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம், வழக்கறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் பின், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தை, கடந்த ஜூன் 18 ம் தேதி அரசு பிரித்து, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இளைஞர் நீதி குழுமம் அமைத்தது. இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்ல வளாகத்தில், தனியாக ஒரு கட்டடத்தில் இளைஞர் நீதி குழுமம் அமைக்கப்பட்டது.
இதன் துவக்க விழா, நேற்று நடந்தது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணகுமார் வரவேற்றார். இதில், முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் பங்கேற்று, இளைஞர் நீதி குழுமத்தை துவக்கி வைத்தார்.
டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ், பார் அசோசியேஷன் தலைவர் மகேஷ்குமார், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். அரசு சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைமை குற்றவியல் நீதிபதி பாஸ்கரன் நன்றி கூறினார்.