/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கத்தியை காட்டி வாலிபரிடம் மொபைல் போன் பறிப்பு
/
கத்தியை காட்டி வாலிபரிடம் மொபைல் போன் பறிப்பு
ADDED : ஜூன் 02, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர், ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷேக் மஸ்தான், 34. இவர், கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூரில், ஆண்கள் விடுதியில் தங்கி, சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் வேலை முடிந்து, சிறுசேரி பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து வந்துள்ளார்.
அப்போது, 'பைக்'கில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, ஷேக் மஸ்தான் கையில் இருந்த மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.