/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மகேந்திரா சிட்டியில் வாலிபரின் பைக் திருட்டு
/
மகேந்திரா சிட்டியில் வாலிபரின் பைக் திருட்டு
ADDED : டிச 08, 2024 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:மதுரையைச் சேர்ந்தவர் அகிலேஷ், 21. இவர், செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தொழிற்சாலை வாசலில் தன் 'யமஹா ஆர்.15' பைக்கை நிறுத்தி விட்டுச் சென்றார். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து அவர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.