sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புறநகரில் குடிநீர் தேவை இருமடங்கு அதிகரிப்பு: புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலனை

/

புறநகரில் குடிநீர் தேவை இருமடங்கு அதிகரிப்பு: புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலனை

புறநகரில் குடிநீர் தேவை இருமடங்கு அதிகரிப்பு: புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலனை

புறநகரில் குடிநீர் தேவை இருமடங்கு அதிகரிப்பு: புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலனை


ADDED : ஜூலை 14, 2011 11:03 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்சென்னை புறநகர் உள்ளாட்சிகளின் குடிநீர் தேவை, தற்போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பூர்த்தியாகிறது.

தேவை இரு மடங்கு அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் ஆதாரத்திற்கான மாற்று வழிகள் குறித்தும், புதிய குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரின் வளர்ச்சி காரணமாக, புறநகர் பகுதிகளுக்கு மக்கள் படையெடுக்க துவங்கிவிட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் புறநகர் பகுதிகளின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்கேற்ப குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லைஉதாரணமாக, பல்லாவரம் நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 452. தினசரி தேவைப்படும் குடிநீரின் அளவு 291 லட்சம் லிட்டர்.



ஆனால், தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 68 லட்சம் லிட்டரும், சென்னை குடிநீர் வாரியம் மூலம் இரண்டு லட்சம் லிட்டர் என, மொத்தம் 70 லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. பம்மல் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை,73 ஆயிரத்து 260. தினசரி குடிநீர் தேவை 99 லட்சம் லிட்டர். ஆனால், தற்போது சென்னை குடிநீர் வாரியம் மூலம் வெறும், 18 லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. அனகாபுத்தூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 48 ஆயிரம். இந்நகராட்சிக்கு தேவைப்படும் குடிநீரின் அளவு 64 லட்சம் லிட்டர். ஆனால், சென்னை குடிநீர் வாரியம் மூலம் வெறும் 10 லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.



திருநீர்மலை பேரூராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 28 ஆயிரம். தேவைப்படும் குடிநீரின் அளவு 20 லட்சம் லிட்டர். ஆனால், தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் தற்போது 15 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. பொழிச்சலூர் ஊராட்சியின் மக்கள் தொகை 30 ஆயிரம். தேவைப்படும் குடிநீரின் அளவு 12 லட்சம் லிட்டர். தற்போது உள்ளூர் நீர் ஆதாரம் மூலம் 3 லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் பல்லாவரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சிகளுக்கு மட்டும் 365 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், தற்போது 123 லட்சம் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.



ஆலந்தூர், தாம்பரம் தொகுதிகளுக்குட்பட்ட உள்ளாட்சிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காணும் வகையில், குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதன்படி, பல்லாவரம் தொகுதி முழுவதும் சென்னை குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் சப்ளை செய்யவும், அதற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து போரூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு வந்து, அங்கிருந்து குழாய் மூலம் பல்லாவரத்திற்கு நேரடியாக குடிநீர் சப்ளை செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.



இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பல்லாவரம் தொகுதிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கிடைக்கும் நீர், உபரிநீராக தாம்பரம் நகராட்சிக்கு கூடுதலாக கிடைக்கும். கூடுதல் நீரை சேமித்து வைக்கும் வகையில், நீர்தேக்க தொட்டிகள் கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளன. சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மட்டுமின்றி, பொதுப்பணித்துறை மூலம் உள்ளூர் ஏரிகளை சீரமைத்து, அதில் இருந்து நீர் பெற முடியுமா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



அடுத்த ஆண்டு கோடைக்குள் இத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாக துறையும், சென்னை குடிநீர் வாரியமும் இணைந்து, சில திட்டங்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளன.

* நகராட்சிகளில் நபர் ஒன்றுக்கு 135 லிட்டரும், பேரூராட்சிகளில் 70 லிட்டரும், ஊராட்சிகளில் 40 லிட்டரும் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

*ஆனால், இந்த குறியீட்டு அளவை சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள எந்த உள்ளாட்சி அமைப்பும் எட்டாத நிலையே நீடிக்கிறது.



- கே.எஸ்.வடிவேலு -








      Dinamalar
      Follow us