sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மேம்பால பணி மந்தம்: முடங்கி போனது காக்ரன் பேசின் சாலை

/

மேம்பால பணி மந்தம்: முடங்கி போனது காக்ரன் பேசின் சாலை

மேம்பால பணி மந்தம்: முடங்கி போனது காக்ரன் பேசின் சாலை

மேம்பால பணி மந்தம்: முடங்கி போனது காக்ரன் பேசின் சாலை


ADDED : ஜூலை 13, 2011 11:01 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கொருக்குபேட்டை காக்ரன் பேசின் சாலை, ரயில்வே மேம்பாலம் பணி மந்தமாக நடப்பதால், அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு தொடர்கிறது.கொருக்குபேட்டை, ஆர்.கே.,நகர் பகுதியை சுற்றியுள்ள, 500க்கும் மேற்பட்ட நகர்களில், லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

இவர்கள் பாரிமுனை, சென்ட்ரல், அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு காக்ரன் பேசின் சாலை மட்டுமே, பயன்பட்டு வந்தது. இந்த சாலை வழியாக, ஆர்.கே., நகர், ஐ.ஓ.சி., பகுதிகளுக்கு மாநகர பஸ்களும் இயக்கப்பட்டது.மீனம்பாள் நகர் குறுக்கே செல்லும் இருப்புப் பாதை, அப்பகுதியின் போக்குவரத்திற்கு பெரும் பிரச்னையாக இருந்து வந்தது.



சரக்கு ரயில்கள் செல்லும் போது, வாகனங்கள் பல மணிநேரம் நிற்க வேண்டிய நிலையும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.தற்கு தீர்வு காணும் வகையில், தி.மு.க., ஆட்சியில், 84 லட்ச ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டுவதற்கு, அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, காக்ரன் பேசின் சாலையில், மாநகர பஸ்கள் உட்பட, வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. அங்கிருந்த ரயில்வே கேட் அகற்றப்பட்டு, பணிகள் வெகு விரைவாக துவங்கியது. இந்த பணி, ஜூன் 2009ல் துவங்கி, 21 மாதங்களில் முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், பணிகள் மெதுவாக நடப்பதால், தற்போது பில்லர்கள் மட்டுமே காட்சியளிக்கிறது.பாலம் கட்டும் பணி மந்தமாக நடப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.



இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாரிமுனை, அண்ணாசாலை, ஸ்டான்லி, அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல, 7 கி.மீ., சுற்றி வர வேண்டியுள்ளது. காக்ரன் பேசின் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், அவசர நேரங்களில், ஆம்புலன்சோ, தீயணைப்பு வண்டிகள் வந்து சேர முடியவில்லை. இந்த தாமதத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.பாலப்பணிகள் தாமதம் குறித்து, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வெற்றிவேல், ''மாநகராட்சி கமிஷனரிடம், பணிகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளேன். குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காமல், காலம் தாழ்த்தும் கான்ட்ராக்டர் மீது, சட்டப்படி நடவடிக்கை ஆலோசித்து வருகிறோம்'' என்றார்.இது குறித்து, மாநகராட்சி பாலங்கள் துறை, மூத்த பொறியாளர் அக்கிலியிடம் கேட்டபோது, ''இருப்புப் பாதையின் குறுக்கே ரயில்வேயினர் பில்லர் எழுப்பி பணிகளை முடித்து தரவேண்டும். அந்த பணி தாமதமாவதால், பாலத்தை குறித்த காலத்திற்குள் முடிக்க முடியவில்லை. 2012 மார்ச்சில் பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறக்கப்படும்'' என்றார்.



-ராஜ்குமார் -








      Dinamalar
      Follow us