/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் : மொபைல்போன் விற்பனையாளர்கள் அறிவிப்பு
/
காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் : மொபைல்போன் விற்பனையாளர்கள் அறிவிப்பு
காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் : மொபைல்போன் விற்பனையாளர்கள் அறிவிப்பு
காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் : மொபைல்போன் விற்பனையாளர்கள் அறிவிப்பு
ADDED : ஜூலை 11, 2011 11:28 PM
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற கடையடைப்பு நடத்தப் போவதாக, மொபைல்போன் மற்றும் ரீசார்ஜ் சில்லறை விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மொபைல்போன் மற்றும் ரீசார்ஜ் சில்லறை விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சமீபகாலமாக ஏர்டெல், ஏர்செல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் சிறப்பு சேவைகள் என்கிற பெயரில், பொதுமக்களின் அனுமதி இல்லாமல், பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதனால், வாடிக்கையாளர் எங்களிடம் சண்டைக்கு வருகின்றனர். மேலும், அதிகளவில் வாடிக்கையாளர்களை சேர்க்க, சில விற்பனையாளர்களிடம் அதிக லாபம் தருவதாக ஆசையை காட்டுகின்றனர்.
அதிலும் மாதக் கடைசியில், டார்கெட் முடிப்பதற்குள், சிம்கார்டுகளை முன் கூட்டியே ஆக்டிவேட் செய்து, தவறான விற்பனையில் விற்க தூண்டுகின்றனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை மாற்றி சிம்கார்டு விலையை உயர்த்தி, வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் சான்று நகல்களை முழுமையாக நேரடி சோதனை செய்த பிறகே, ஆக்டிவேட் செய்ய வேண்டும். கடந்த 2008 ஆம் ஆண்டில், எங்களிடம் சிம்கார்டு வாங்கிய வாடிக்கையாளர் பற்றி, தற்போது காவல் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
மொபைல்போன் நிறுவனங்களிடம் தான் இப்பொறுப்பை ஏற்க வேண்டும். ஆரம்பத்தில், 7 சதவீதமாக இருந்த எங்கள் லாபத்தை, 3.8 ஆக மாற்றி, தற்போது, 3.3 சதவீதமாக குறைத்துள்ளனர். இந்த லாபத்தை வைத்து கொண்டு, கடை வாடகை, சம்பளம் போன்ற செலவுகளை சமாளிக்க முடியாது. ஆகவே, இப்பிரச்னைகளுக்காக வரும் 13ம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை வியாபாரிகள் ஒன்றிணைந்து மெமோரியல் ஹால் முன்பு, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். காலவரையற்ற விற்பனை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.