ADDED : ஜூலை 11, 2011 11:28 PM
சென்னை : தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, தண்டையார்பேட்டை கைலாசி முதலி தெருவில், கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில், 450க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின. விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தி.மு.க., சார்பில், தலா 10 கிலோ அரிசி, புடவை, லுங்கி, சட்டை, போர்வை உள்ளிட்ட, 17 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
நிவாரண உதவிகளை வழங்கி, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் பேசுகையில், ''ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க., மக்களுக்காக பாடுபடும். தேர்தலில் தோல்வியடைந்தால் சிலர் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், சேகர்பாபு தோல்வியடைந்தும், தான் செய்யும் கடமையை இங்கு செய்துள்ளார்'' என்றார்.
நிகழ்ச்சிக்கு ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு முன்னிலை வகித்தார். தி.மு.க., துணை பொதுச் செயலர் சற்குண பாண்டியன், எம்.பி., டி.கே.எஸ்., இளங்கோவன், பலராமன், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.