sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதால் நடவடிக்கை; 60 ஆலைகள் மூடல்!

/

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதால் நடவடிக்கை; 60 ஆலைகள் மூடல்!

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதால் நடவடிக்கை; 60 ஆலைகள் மூடல்!

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதால் நடவடிக்கை; 60 ஆலைகள் மூடல்!

UPDATED : செப் 03, 2024 06:58 AM

ADDED : செப் 02, 2024 11:46 PM

Google News

UPDATED : செப் 03, 2024 06:58 AM ADDED : செப் 02, 2024 11:46 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 60 தொழிற்சாலைகள், ஐந்து ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 12 தொழிற்சாலைகளுக்கு 6.70 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏழு இடங்களில் சிப்காட் என்ற தொழில்பூங்கா அமைந்துள்ளது. அவற்றில் 2,400க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தவிர, சுற்று வட்டாரங்களில் ஏராளமான கல் குவாரிகள், மின்னணு பொருட்களின் உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

'இந்த தொழிற்சாலைகளில், சுற்றுச்சூழல் விதி முறையாக கடைப்பிடிப்பதில்லை. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, கழிவுகள், கழிவுநீர் உள்ளிட்டவை பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு வருகிறது' என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வாயு போன்றவற்றின் அளவீடை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனினும், பல இடங்களில், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கழிவுநீர் வெளியேறுவதும், நீர்நிலைகளில் கலப்பதும் தொடர்ந்தபடியே உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி நத்தப்பேட்டையில் கொட்டி குவிக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில், 2021ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் ஏராளமானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள் கொட்டி குவிக்கும் குப்பையும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அப்பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு, இந்த குப்பை கிடங்கும், அவ்வப்போது தீ வைத்து எரிப்பதும் காரணம் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருதியது.

இதையடுத்து 2021ல் இரண்டு முறை, காஞ்சி மாநகராட்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்தது. 95 லட்சம் ரூபாய், 38 லட்சம் ரூபாய் என விதிக்கப்பட்ட அபராத தொகையை, மாநகராட்சி நிர்வாகம் இதுவரை செலுத்தவில்லை.

குன்றத்துார் ஒன்றியத்தில் கோவில் நிலங்களில் குப்பை கொட்டி வைத்திருந்தது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்தது.

இதில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, குன்றத்துார் ஒன்றிய அலுவலகத்திற்கு, கடந்தாண்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த தொகையையும் குன்றத்துார் ஒன்றியம் செலுத்தவில்லை.

செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீரை கலக்க விடுவதும் தொடர்கிறது. பழவேரி, அருங்குன்றம் போன்ற கிராமங்களில் செயல்படும் கல் குவாரிகளால் அப்பகுதியில் ஒலி மாசு, காற்று அதிகரித்து வருகிறது. அதேபோல், மட்காத தன்மையுடைய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும், மாவட்டத்தில் தொடர்ந்தபடியே உள்ளது.

இவற்றை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் காற்று, ஒலி, நீர், நிலம் மாசு ஏற்படுத்தி வரும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல் குவாரிகள் மீதும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவு, திரவ கழிவு, வாயுவை சரிவர கையாளாத 60 தொழிற்சாலைகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மூடப்பட்டு உள்ளன.

மேலும், விதிகளை பின்பற்றாத கல்குவாரி, தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, 6.70 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குப்பை கொட்டி வைத்திருப்பது தொடர்பாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கும், குன்றத்துார் ஒன்றிய அலுவலகத்திற்கும் விதிக்கப்பட்ட அபராத தொகையை அவர்கள் செலுத்தவே இல்லை. தொழிற்சாலைகள் விதிமீறலில் ஈடுபட்டு, நீர்நிலைகளில் கழிவுநீர் விடுவது, குப்பை கழிவுகளை சரிவர கையாளாதது போன்ற காரணங்களால் அபராதம் விதிப்பதோடு, மூடல் உத்தரவையும் வழங்குகிறோம்.

விதிமீறலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது.

சுற்றுச்சூழல் விதி கடைபிடிக்காத 60 தொழிற்சாலைகள், ஐந்து ஆண்டுகளில் மூடப்பட்டு உள்ளன. சமீபத்தில் கூட, பெயின்ட் கம்பெனி ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்ட 12 தொழிற்சாலைகளுக்கு 6.70 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை 1.96 கோடி ரூபாய் மட்டுமே அபராதம் செலுத்தப்பட்டு உள்ளது. இதே போல அபராதம் விதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், 12 தொழிற்சாலைகள் அபராதத்தை செலுத்தாமல் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை

காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வந்த 72 பட்டு சாய தொழிற்சாலைகளுக்கும், அய்யம்பேட்டை மற்றும் முத்தியால்பேட்டை பகுதிகளில் இயங்கி வந்த 62 சாய தொழிற்சாலைகளுக்கும் மூடல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த சாய ஆலைகள், பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.கீழ்கதிர்பூர் அண்ணா பட்டு பூங்காவில், 3,650 கிலோ லிட்டர் கொள்ளளவு உடைய இரண்டு பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதால், இந்த ஆலைகளை, பட்டு பூங்காவில் இடமாற்றம் செய்ய கட்டுமான பணிகள் நடக்கின்றன.

      Dinamalar
      Follow us