/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
---மாவட்ட ஒலிம்பியாட் தடகளம் எபினேஷர் பள்ளி அணி முதலிடம்
/
---மாவட்ட ஒலிம்பியாட் தடகளம் எபினேஷர் பள்ளி அணி முதலிடம்
---மாவட்ட ஒலிம்பியாட் தடகளம் எபினேஷர் பள்ளி அணி முதலிடம்
---மாவட்ட ஒலிம்பியாட் தடகளம் எபினேஷர் பள்ளி அணி முதலிடம்
ADDED : அக் 14, 2025 01:01 AM
சென்னை, ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லுாரி மற்றும் ரோட்டரி 3233 மாவட்ட நிறுவனம் இணைந்து, சென்னை மாவட்ட அளவில் 'ஒலிம்பியாட் - 2025' விளையாட்டு போட்டியை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடத்தின.
இதில், பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டியின் ஆண்கள் பிரிவில், எபினேஷர் பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ., அணியும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
கல்லுாரிகளுக்கான கூடைப்பந்தில், சென்னை ஐ.ஐ.டி., அணியும், எறிபந்து போட்டியில், பெண்கள் பிரிவில் வேலம்மாள் மெயின் அணியும், கோ - கோ போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., அணி ஆண்கள் பிரிவிலும், ராணிமேரி அணி பெண்கள் பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.