/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பார்வையற்றோர் பள்ளி
/
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பார்வையற்றோர் பள்ளி
ADDED : மே 10, 2024 11:55 PM
பூந்தமல்லி பார்வைக் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய, 15 பேரும் தேர்ச்சி பெற்றனர். திருநாவுக்கரசு என்ற மாணவர், 405 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.
கைதிகள் 87.69 சதவீதம் 'பாஸ்'
சென்னை புழல் மத்திய சிறை உட்பட தமிழகத்தின், 14 சிறைகளிலும் உள்ள கைதிகளில் 231 பேர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில், 228 பேர் தேர்ச்சி அடைந்தனர். மதுரை, கோவை மத்திய சிறைகளில் தலா, 52 பேர் தேர்வு எழுதியதில், மதுரை சிறைக் கைதிகள், 47 பேர், கோவை சிறைக் கைதிகள், 50 பேர் தேர்ச்சியடைந்தனர்.
தமிழக சிறைகளில் தேர்வு எழுதியோரில், 87.69 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. பாளையங்கோட்டை சிறையை சேர்ந்த கைதி இசக்கி பாண்டி, 500க்கு 429 மதிப்பெண், மதுரை சிறை கைதி ஈஸ்வரன் --- 421, ஆதி அருண்குமார் - 418 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சியில், அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 138 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 129 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 93.47 சதவீதம்.
ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தேர்வு எழுதிய 220 பேரில், 171 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 78 சதவீதம். இப்பள்ளியில், 20க்கும் அதிகமான மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பழைய தாம்பரம், நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 146 மாணவர்களில், 119 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 81.5 சதவீதம்.
பழைய பெருங்களத்துார், அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 136 பேரில், 103 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 76 சதவீதம். பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப் பள்ளி, 71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.