/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
-சர்வதேச பிடே ஓபன் செஸ் தமிழக வீரர் முன்னிலை
/
-சர்வதேச பிடே ஓபன் செஸ் தமிழக வீரர் முன்னிலை
ADDED : மே 24, 2024 12:10 AM

சென்னை, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு, இந்திய சதுரங்க கூட்டமைப்பு ஆதரவுடன், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில், அனந்தி செஸ் அகாடமி மற்றும் வியூகம் செஸ் அகாடமி இணைந்து, சர்வதேச ஓபன் பிடே ரேட்டிங் செஸ் போட்டி நடத்துகின்றன.
போட்டிகள், செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பல்கலை அரங்கில் நடக்கின்றன. இப்போட்டியில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா வீரர்கள் உட்பட நாடு முழுதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
அனைத்து வயது பிரிவினர் பங்கேற்கும் இப்போட்டியானது, 'ஓபன்' முறையில், தினம் இரு சுற்றுகள் வீதம் நடக்கின்றன.
நேற்று மதியம் வரை நடந்த மூன்று சுற்றுகள் முடிவில், தமிழக வீரர் விக்னேஷ் 3க்கு 3 என்ற புள்ளிக்கணக்கில் முதலிடம் பிடித்து முன்னிலையில் உள்ளார்.
அவரை தொடர்ந்து, குஜராத் வீரர் ஆனந்த்கட் கர்தவ்யா, ஜெப்பியார் பல்கலை வீரர் ஹிரேன், கேரளா அனில்குமார், டில்லி பிரதீப் திவாரி, கர்நாடகா பிரதமேஷ், ஒடிசா ஸ்ரீஹான் சபாத், புதுச்சேரி ராகுல் ராமகிருஷ்ணன் உட்பட 40 பேர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.