/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சியில் மாணவர்கள் தேர்ச்சி... 87.13 சதவீதம்! பாஸ்
/
மாநகராட்சியில் மாணவர்கள் தேர்ச்சி... 87.13 சதவீதம்! பாஸ்
மாநகராட்சியில் மாணவர்கள் தேர்ச்சி... 87.13 சதவீதம்! பாஸ்
மாநகராட்சியில் மாணவர்கள் தேர்ச்சி... 87.13 சதவீதம்! பாஸ்
ADDED : மே 07, 2024 12:04 AM
சென்னை, : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 87.13 சதவீத மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட, 0.27 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. வழக்கம்போல் அதிகமாக, 91.15 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நுங்கம்பாக்கம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 35 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், பிளஸ் 2 பொது தேர்வை 2,140 மாணவர்கள், 2,858 மாணவியர் என, 4,998 பேர் எழுதினர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், 1,750 மாணவர்கள்; 2,605 மாணவியர் என, 4,355 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி, 81.78 சதவீத மாணவர்கள், 91.15 சதவீத மாணவியர் என, சராசரியாக 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 86.86 சதவீதம் தேர்ச்சி இருந்த நிலையில், இந்தாண்டு 0.27 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ், 206 தொடக்கம், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலை என, 417 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 1.2 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்தவில் தேர்வு எழுதியோரில் 4,355 என, 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாட வாரியாக, வணிகவியல் 16; கணினி பயன்பாடுகள் 14; பொருளாதாரம் 12; கணினி அறிவியல் 9; கணக்கியல் 2; புவியியல் 1; கணிதம் 1; விலங்கியல் 1 என, 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மதிப்பெண்கள் அடிப்படையில், எம்.எச்., சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தில் உள்ளது.
கொளத்துார் மேல்நிலைப் பள்ளி, புத்தா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 575 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன.
எம்.எச்., சாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 573 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாம் இடம் பிடித்துள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.