ADDED : ஏப் 04, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தில்லுமுல்லு செய்ய முடியாது
' ஓட்டுச்சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் ஆறு அடுக்கு பாதுகாப்பு, 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பை மீறி எதுவும் செய்ய முடியாது' என, போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
மேலும், அவர்கள் கூறியதாவது:
ஓட்டுச்சாவடி முழுதும் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரி உட்பட அனைவரும் கண்காணிப்பில் இருப்பர். ஓட்டும் எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 'சிசிடிவி' கேமராக்கள் கொண்டு வரப்படும். இதனால், ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில் எவ்வித தில்லுமுல்லும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

