ADDED : ஏப் 08, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, நைட்ஸ் மூவ் செஸ் அகாடமி மற்றும் செயின்ட் ஜோசப் கலை கல்லுாரி இணைந்து, குன்றத்துார் அடுத்த கோவூரில் உள்ள அதே கல்லுாரி வளாகத்தில், வரும் 13ம் தேதி செஸ் போட்டியை நடத்துகின்றன.
பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டியில், 8, 10, 13, 16, 25 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும், தனித்தனியாக நடக்க உள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களில் 20 பரிசுகளும், பெண்களில் 15 பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. பங்கேற்க விரும்புவோர், 12ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
விபரங்களுக்கு, 80729 22889, 63811 76645 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.