பிரச்னை இல்லை
திருவொற்றியூர் மண்டலத்தின் தினசரி குடிநீர் தேவை, 14 எம்.எல்.டி., தற்போது, 12 எம்.எல்.டி., வரை வழங்கப்படுவதால், பிரச்னை ஏதுமில்லை. ஏழாவது வார்டில், மூன்று லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. விரைவில், நிரந்தர தீர்வு காணப்படும். மணலியில் தினசரி தேவை, 9.25 எம்.எல்.டி.,யாக உள்ளது. குடிநீர் வினியோகத்தில், அங்கு எந்த பிரச்னையும் கிடையாது.
- மண்டல அதிகாரிகள்
என்ன காரணம்?
தற்போது, புழல் ஏரியில் தண்ணீர் இருப்பதால், அதை சுத்திகரித்து, அப்பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. அதனால், மீஞ்சூரில் தினம் 2.30 கோடி லிட்டராக உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது. கடல்நீரை குடிநீராக மாற்ற 1,000 லிட்டருக்கு 32 ரூபாய் செலவாகிறது. அதே, ஏரி நீரை குடிநீராக்க 7.50 ரூபாய் மட்டுமே செலவாகிறது என்பதால், ஏரி நீரை அதிகம் பயன்படுத்துகிறோம்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்

