தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கோடையில் கல்லா கட்டும் கேன் குடிநீர் நிறுவனங்கள்...திடீர் ஆலைகள்! அனுமதி பெறாமல் இயங்குவதால் சுகாதார அச்சுறுத்தல்

கோடையில் கல்லா கட்டும் கேன் குடிநீர் நிறுவனங்கள்...திடீர் ஆலைகள்! அனுமதி பெறாமல் இயங்குவதால் சுகாதார அச்சுறுத்தல்

கோடையில் கல்லா கட்டும் கேன் குடிநீர் நிறுவனங்கள்...திடீர் ஆலைகள்! அனுமதி பெறாமல் இயங்குவதால் சுகாதார அச்சுறுத்தல்


ADDED : மே 17, 2024 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, டி.டி.எஸ்., என்ற அமிழ்த்தப்பட்டுள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு, லிட்டருக்கு 500 மில்லி கிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். மனிதர்கள் குடிப்பதற்கு பயன்படுத்தும் நீரில், உடலில் நுண்ணிய அளவில் தேவைப்படும் கனிமங்களான மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும், அதே போல உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கனிமங்களான கேட்மியம், அஸ்பெஸ்டாஸ், ஈயம், இரும்பு போன்ற தாதுக்களும் இருக்கும். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தாதுக்களின் அளவு மிக குறைந்தளவு இருந்தால் மட்டுமே அதை குடிநீராக பருக வேண்டும். அதே போல நல்ல தாதுக்களான மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்குள் இருக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் உரிய சத்துக்கள் இல்லாதபட்சத்தில் அதை தொடர்ந்து பயன்படுத்தும் போது எலும்பு, நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.

- டாக்டர், அ.ப.பரூக் அப்துல்லா,

அரசு பொது நல மருத்துவர், சென்னை

எப்படி தயாராகிறது கேன் குடிநீர்?

கிணற்று நீர் மற்றும் ஆழ்துளை கிணறில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர், குடிநீர் ஆலைகளுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும். அந்த நீரின் டி.டி.எஸ்., அளவு பரிசோதிக்கப்படும். தண்ணீரில் டி.டி.எஸ்., அளவு அதிகரிமாக இருந்தால், சுவைப்பதற்கு துவர்ப்பாகவும் உப்புத்தன்மையுடனும் இருக்கும். எனவே, டி.டி.எஸ்., எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது.தண்ணீரில் 10,000 லிட்டருக்கு, 1 கிலோ குளோரின் வீதம் கலக்கப்படும். முதலில் கார்பன் பில்டர் என்ற வடிகட்டியில் தண்ணீர் செலுத்தப்படும். இதில் மிதக்கும் துாசுகள் வடிகட்டப்படும். பின், 'சாண்ட் பில்டர்' என்ற மணல் வடிகட்டியில், நீர் செலுத்தப்படும். அதில் கலங்கலற்ற தெளிவான நீர் கிடைக்கும். தொடர்ந்து, 'மைக்ரான் பில்டர்' என்ற மிக நுண்ணிய துாசு, கிருமிகளை வடிகட்டும் வடிகட்டியினுள் நீர் செலுத்தப்படும். முதலில் 0.5 மைக்ரான் வடிகட்டியில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும். பின், 0.1 மைக்ரான் அளவுள்ள மிகவும் நுண்ணிய வடிகட்டியில், தண்ணீரில் உள்ள எல்லா துாசுக்கள், நுண்ணிய பொருட்கள், கிருமிகள் வடிகட்டி சுத்தப்படுத்தப்படும்.இதையடுத்து, 'ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்' என்ற சவ்வூடு பரவல் முறையில், தண்ணீர் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தப்பட்டு வெளிவரும்போது துாய்மையாகவும், குடிக்க தகுந்ததாகவும் கிடைக்கும். இந்த குடிநீரில், 'அல்ட்ரா வயலட் கதிர்' செலுத்தி சுத்தமான குடிநீராக மாற்றப்படுகிறது. இதன்படி, 1 லிட்டர் குடிநீர் தயாரிக்கும் போது 300 மில்லி லிட்டர் தண்ணீர் வீணாகிறதுஉற்பத்தி நிலையத்தில் இருந்து 20 லிட்டர் கொள்ளளவுள்ள கேன், 7 - 8 ரூபாய்க்கு மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைகள் வாயிலாக 30 - 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.



விவசாயிகள் குற்றச்சாட்டு

அரசு தரப்பில், குடிநீர் வாரியங்கள் வாயிலாக வழங்கப்படும் நீரை, குடிநீராக பயன்படுத்த நடுத்தர மக்கள் மட்டுமல்ல; ஏழை மக்களும் தயங்குகின்றனர்.இதனால், சின்னச் சின்ன கடைகளில் கூட, தண்ணீர் கேன் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மற்றொரு புறம், விவசாய நில பகுதிகளில், ஆழ்துளை அமைத்து, நிலத்தடி நீரை குடிநீர் ஆலைகள் உறிஞ்சி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் நிலத்தடி நீர் அதிகளவில் கிடைக்கிறது. நிலத்தடி நீர் அதிகம் உள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து, ஆர்.ஓ., பிளாட்டுகள் எனும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து வருகின்றனர். இவற்றில் பெரும்பாலான இடங்களில் உரிய அனுமதி பெறாமல் விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீர் எடுக்கப்படுகிறது. 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத குழாய் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால், விவசாயத்திற்கு போதிய நீரின்றி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிஉள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us