ADDED : செப் 06, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, சி.ஐ.டி., நகர் 4வது பிரதான தெருவில், ஒரு குப்பை தொட்டி உள்ளது. நேற்று இரவு, தொட்டியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.
அருகில் உள்ள ஆட்டோ மெக்கானிக் கலியபெருமாள் சென்று பார்த்தபோது, தொட்டியில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
போலீசார் குழந்தையை மீட்டு, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை பிறந்து ஒரு மாதம் இருக்கும். திடகாத்திரமாக இருப்பதாகவும், காப்பகத்தில் சேர்க்க தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் கூறினர். குழந்தையை குப்பையில் வீசிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.