/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 கிலோ கஞ்சா பறிமுதல் அயனாவரத்தில் ஒருவர் கைது
/
10 கிலோ கஞ்சா பறிமுதல் அயனாவரத்தில் ஒருவர் கைது
ADDED : மே 01, 2024 12:44 AM
அயனாவரம், ஆந்திராவில் இருந்து, 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து, அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்பதாக, கிழக்கு மண்டல இணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அயனாவரம் கே.கே., நகர் மைதானம் அருகே, சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து சோதித்தனர்.
அப்போது, அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், ஆவடியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான சதீஷ், 37, என்பதும், நண்பர்களுடன் ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, அயனாவரம் போலீசார் சதீஷை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளான பெரியபாளையத்தைச் சேர்ந்த சூர்யா, ஆல்பர்ட், திருவொற்றியூரைச் சேர்ந்த ராமு உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.