/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுத்தடுத்த 2 வீடுகளில் 10 சவரன் நகை திருட்டு
/
அடுத்தடுத்த 2 வீடுகளில் 10 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 20, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த, நசரத்பேட்டை சாரதம்பாள் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 36; ஆட்டோ ஓட்டுனர்.
நேற்று முன்தினம், உறவினர்களுடன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று வீடு திருப்பியபோது, வெங்கடேசன் வீடு மற்றும் அருகில் வசிக்கும் அவரது உறவினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இரு வீடுகளில் இருந்தும் 10 சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். நசரத்பேட்டை போலீசார் தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர்.