/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிக விலைக்கு விற்று தருவதாக 10 சவரன் 'அபேஸ்'
/
அதிக விலைக்கு விற்று தருவதாக 10 சவரன் 'அபேஸ்'
ADDED : ஆக 07, 2024 12:35 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் ஹரிஸ், 35; அதே பகுதியில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு நன்கு பழக்கமான வேளச்சேரியைச் சேர்ந்த பல்வந்த் கோட்டரி என்பவரும், தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் ஹரிஸிடம், தங்க நகைகளை அதிக விலைக்கு விற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய ஹரிஸ், கடந்த மார்ச் 22ம் தேதி பல்வந்த் கோட்டரியிடம் மோதிரம், தாலி உள்ளிட்ட 10 சவரன் தங்க நகையை கொடுத்து, விற்று பணம் தருமாறு கூறியுள்ளார்.
ஆனால் நான்கு மாதங்களாகியும், பல்வந்த் கோட்டரி தங்க நகைகளை விற்று பணம் தராமலும், நகையை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் ஹரிஸ் கொடுத்த புகாரின்படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.