/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
100 மணிநேரம் சிலம்பாட்டம் அயனாவரத்தில் உலக சாதனை
/
100 மணிநேரம் சிலம்பாட்டம் அயனாவரத்தில் உலக சாதனை
ADDED : மே 30, 2024 12:28 AM

சென்னை, அயனாவரத்தில், இடைவிடாமல் 100 சிறுவர்கள், 100 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி, நேற்று மாலை சாதனையை நிறைவு செய்தனர்.
கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் பாரம்பரிய வீரர்கள் சிலம்பம் இண்டர்நேஷனல் அமைப்பு சார்பில், அயனாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில், உலக சாதனை சிலம்பாட்டத் திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அமைப்பில் பயிற்சி பெறும் 100 சிறுவர்கள், 100 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்வு, கடந்த 25ம் தேதி மாலை துவங்கியது.
இதில், 4 வயது முதல், 22 வயது வரை உள்ள அனைவரும், வெவ்வேறு பிரிவுகள் வாரியாக, ஒவ்வொரு குழுவினரும், மூன்று முதல் எட்டு மணி நேரம் வரை, தொடர்ந்து சிலம்பம் சுற்றினர். இந்த சாதனையை, நேற்று மாலை 4:00 மணியளவில், சிறுவர்கள் நிறைவு செய்தனர். மூன்று நாட்களாக, வில்லிவாக்கம் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, சாதனை நிகழ்வில் பற்கேற்ற வீரர் - வீராங்கனையரை உற்சாகப்படுத்தினர்.
நிறைவு நாளான நேற்று மாலை, அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று, மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.