/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து போலீசாருக்கு 100 இடங்களில் கழிப்பறை
/
போக்குவரத்து போலீசாருக்கு 100 இடங்களில் கழிப்பறை
ADDED : ஆக 20, 2024 12:46 AM

சென்னையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போலீசாருக்கென, 100 இடங்களில் கழிப்பறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன.
அவற்றிலுள்ள, 284 சிக்னல்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போலீசார், கழிப்பறை வசதியின்றி மிகவும் சிரமப்பட்டனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் நடவடிக்கையின்படி, முதற்கட்டமாக 100 இடங்களில் கழிப்பறை அமைக்கும் பணியை, 'சாகா' என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை, 14 இடங்களில் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைக்கு மேல் பகுதியில், 270 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கை கழுவ 'வாஷ்பேசின்' அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைக்கு தேவையான நீரை தினமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.