/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 மேம்பாலங்கள் அழகுபடுத்த ரூ.11 கோடி
/
4 மேம்பாலங்கள் அழகுபடுத்த ரூ.11 கோடி
ADDED : ஜூலை 19, 2024 12:20 AM
சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால், சி.எம்.டி.ஏ., நிதியில் நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வடபழனி, பாடி, வில்லிவாக்கம், ரெட்டேரி மேம்பாலங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்வு செய்யப்பட்ட மேம்பாலங்களின் கீழ் பகுதியில், 10,124 அடி நீளத்துக்கு அழகுபடுத்தும் பணிகள், 11.2 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இங்கு வாகன நிறுத்துமிடம், பூங்காக்கள், நடைபாதை, திடல்கள், திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.