/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அன்ன பாத்திரத்தில் மூழ்கி 11 மாத பெண் குழந்தை பலி
/
அன்ன பாத்திரத்தில் மூழ்கி 11 மாத பெண் குழந்தை பலி
ADDED : மே 31, 2024 12:09 AM

சேலையூர், மே 31-
சேலையூர் அடுத்த மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 27. சேலையூரில் உள்ள 'ஸ்டிக்கர்' கடை ஊழியர். இவரது மனைவி உமாதேவி, 26. இவர்களின், 11 மாத பெண் குழந்தை அர்ச்சனா.
நேற்று முன்தினம் இரவு, அதிக வெப்பம் காரணமாக, வீட்டின் கதவை திறந்து வைத்து, கணவன், மனைவி இருவரும், தரையில் குழந்தையுடன் துாங்கினர்.
நள்ளிரவு, 1:30 மணிக்கு, இருவரும் எழுந்து பார்த்தபோது, துாங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை.
குழந்தையை தேடியபோது, வீட்டு வாசலில் இருந்த 3 அடி உயர அன்ன பாத்திர தண்ணீரில் மூழ்கி கிடந்தது. வயிற்று பகுதி வரை மூழ்கி கிடந்த குழந்தையை மீட்டு, தம்பதி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், குழந்தை ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.