ADDED : ஜூன் 02, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, திருமங்கலம், ஜே.ஜே., நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மொபைல் போன்கள் திருடப்பட்டதாக புகார்கள் வந்தன.
போலீசார் விசாரணை செய்து, மொத்தம் 119 மொபைல் போன்களை மீட்டனர். போன்களை உரியவர்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி, அண்ணா நகரில் நேற்று நடந்தது.
அண்ணா நகர் துணை கமிஷனர் சீனிவாசன் முன்னிலையில், உரியவர்களிடம் போன்கள் ஒப்படைக்கப்பட்டன.