ADDED : ஜூலை 23, 2026 03:53 PM
அ நிறம் | அளவு
ஆவடி: ஆவடியில், சாலையில் சுற்றித்திரிந்த 12 மாடுகள் பறிமுதல்
ஆவடி மாநகராட்சியில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இது குறித்து மாடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அலட்சியமாக இருக்கின்றனர்.
இதையடுத்து, தனியார் அமைப்புடன் சேர்ந்து மாடு பிடிக்கும் பணியை, ஆவடி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று அதிகாலை, பருத்திப்பட்டு, கோவில்பதாகை, பூம்பொழில் நகர், எச்.வி.எப்., சாலையில் சுற்றித்திரிந்த 12 மாடுகளை பறிமுதல் செய்து, காஞ்சிபுரத்தில் உள்ள ‘கோசாலை’ எனும் மாடுகள் பராமரிக்கும் இடத்தில் சேர்த்தனர்.
