/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே நாளில் 12 விமானங்கள் திடீர் ரத்து
/
ஒரே நாளில் 12 விமானங்கள் திடீர் ரத்து
ADDED : ஜூலை 02, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை விமான நிலையத்தில் நேற்று, 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து டில்லி செல்லும் நான்கு விமானங்கள், சென்னை - சீரடி, சென்னை - ஹைதராபாத் என, ஆறு புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதே போல், சீரடி - சென்னை, டில்லி - சென்னைக்கான ஐந்து விமானங்கள், ஹைதராபாத் - சென்னை என, ஆறு வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
நிர்வாக காரணங்களுக்காகவே விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக, விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சரியான முன்னறிவிப்பு இல்லாமல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணியர் அவதி அடைந்தனர்.