/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
12 வாகனம் தீக்கிரை சிகரெட் புகைத்தவர் கைது
/
12 வாகனம் தீக்கிரை சிகரெட் புகைத்தவர் கைது
ADDED : ஜூலை 05, 2024 12:31 AM

கோயம்பேடு, கோயம்பேடு சந்தை, 'ஏ' சாலையிலுள்ள வாகன நிறுத்தத்தில், பழுதான ஆம்னி பேருந்து, ஆட்டோக்கள், கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் மாலை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அருகில் மற்ற வாகனங்களுக்கும் தீ பரவியது.
தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் ஆம்னி பேருந்து, ஒன்பது ஆட்டோக்கள், இரண்டு கார் என, 12 வாகனங்கள் தீயில் நாசமாகின.
அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை, கோயம்பேடு போலீசார் பார்வையிட்டனர். இதில், தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்தில் ஒருவர் ஏறி, தீ வைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
விசாரணையில், பேருந்தில் தீ வைத்தது, அரியலுார் மாவட்டம், செந்துரை பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து, 45, என தெரிந்தது. இவர், கோயம்பேடு சந்தையில் கூலிவேலை செய்து வருகிறார். போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், புகை பிடிப்பதற்காக அந்த ஆம்னி பேருந்தில் ஏறியதாகவும், சிகரெட் பற்ற வைத்த போது, பேருந்தில் இருந்த குப்பை மீது தீப்பொறி விழுந்ததால், தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
அதை அணைக்க முயன்றும் முடியாததால், பயந்து வெளியே வந்ததாகவும், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார்.