/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் கடத்தல் இருவருக்கு 12 ஆண்டு சிறை
/
போதை பொருள் கடத்தல் இருவருக்கு 12 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 27, 2024 12:28 AM
சென்னை, சென்னை, திருவொற்றியூர் காலடிப்பேட்டை பேருந்து நிலையம் அருகில், 2022 ஜூலையில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ரகுமான், சாகுல்அமீது, அக்பர்பாஷா ஆகியோரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், சோதனை நடத்தினர்.
இதில், இருவரிடமும், தலா 60 கிராம், அக்பர் பாஷாவிடம் 12 கிராம் மெத் ஆம்பெட்டமின் போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றி, வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை, போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள் விசாரித்தார். போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார்.
மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், ரகுமான், சாகுல்அமீது ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அக்பர்பாஷாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி திருமகள் உத்தரவிட்டார்.