ADDED : ஜூலை 05, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகர போலீஸ் எல்லையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், 120 பேரை பணியிட மாற்றம் செய்து, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இவர்களில், சென்னை தேனாம்பேட்டை குற்றப் பிரிவில் பணிபுரியும் விஜயலட்சுமி, அதே பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். வேப்பேரி காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் ராஜு, வியாசர்பாடி சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ஆயிரம் விளக்கு காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் வளர்மதி, நுங்கம்பாக்கம் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இவர்கள் உட்பட, 120 பேரை பணியிட மாற்றம் செய்து, கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.