/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழகத்தில் இதுவரை ரூ.127 கோடி பறிமுதல்
/
தமிழகத்தில் இதுவரை ரூ.127 கோடி பறிமுதல்
ADDED : ஏப் 03, 2024 12:20 AM
சென்னை, தமிழகத்தில் இதுவரை ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 127.26 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களின்றி எடுத்துச் செல்லும் 50,000 ரூபாய்க்கு அதிகமான பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததில் இருந்து நேற்று வரை, இவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 60.61 கோடி ரூபாய் ரொக்கம், 3.49 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானம், 47.79 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள், 14.62 கோடி மதிப்பிலான பிற பொருட்கள் என மொத்தம் 127.26 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

