/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் திரிந்த 129 மாடுகள் தாம்பரத்தில் சிறைபிடிப்பு
/
சாலையில் திரிந்த 129 மாடுகள் தாம்பரத்தில் சிறைபிடிப்பு
சாலையில் திரிந்த 129 மாடுகள் தாம்பரத்தில் சிறைபிடிப்பு
சாலையில் திரிந்த 129 மாடுகள் தாம்பரத்தில் சிறைபிடிப்பு
ADDED : ஜூலை 24, 2024 01:19 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் விடப்படுகின்ற மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ஐந்து மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில், ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி வரை, 129 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு, 2.37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் விடாமல், முறையாக பராமரித்துக்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.