/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
15 மேம்பால ரயில் நிலையத்தில் வணிகம் செப்., 9க்குள் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஆக 11, 2024 01:32 AM
சென்னை:சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மேம்பால ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வரை, தினமும் 100 சர்வீஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த தடத்தில் உள்ள மேம்பால ரயில் நிலையங்கள், வணிக நோக்கத்தோடு பெரிய, பெரிய கட்டடங்களாக அமைக்கப்பட்டன.
ஆனால், மத்திய ரயில்வே துறை நிர்ணயிக்கும் வாடகை கட்டணம் அல்லது 'லீஸ்' கட்டணம் அதிகமாக இருந்ததால் நிறுவனங்கள், வியாபாரிகள் முன்வரவில்லை.
இந்நிலையில், இந்த தடத்திலுள்ள 15 மேம்பால ரயில் நிலையங்களிலும்,'ஸ்டால்'கள் அமைப்பது போன்ற வணிகம் செய்ய விரும்புவோர், அடுத்த மாதம் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தங்கள் திட்ட அறிக்கையையும், விருப்ப கடிதத்தையும் அடுத்த மாதம் 6ம் தேதிக்குள், தெற்கு ரயில்வேக்கு அனுப்ப வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை https://sr.indianrailways.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.