/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்திவாக்கம் தாமரைகுளத்தில் 15 ஆக்கிரமிப்புகள் அகற்றம் தீர்ப்பாயத்தில் சென்னை மாநகராட்சி அறிக்கை

ADDED : மே 10, 2024 12:35 AM
சென்னை, சென்னை, எண்ணுார், கத்திவாக்கத்தில் 5.32 ஏக்கர் பரப்பில் இருந்த தாமரைக்குளம், ஆக்கிரமிப்புகளால் 2 ஏக்கராக சுருங்கியது.
இந்த குளமும், குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரங்களில் இருந்து வரும் கழிவுநீரும், குளத்தில் விடப்படுகிறது.
'ஆக்கிரமிப்புகளை அகற்றி, தாமரைக்குளத்தை மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும்' என, மீனவர் நலச் சங்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், 2021-ல் பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க, சென்னை மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மே 3ம் தேதி சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில், கத்திவாக்கம் தாமரைக்குளத்தில் இருந்த 11ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், நான்கு ஆக்கிரமிப்புகளை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.
மீதமுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற மாநகராட்சிக்கு அதிக காலம் தேவைப்படலாம். எனவே, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.