ADDED : ஆக 15, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையிலுள்ள ஒரு வீட்டில், பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ஆய்வு செய்த போது, 15 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது.
இதில் தொடர்புள்ள, வடமாநிலத்தைச் சேர்ந்த கரன் பதுார், 41, தேனாம்பேட்டையைச் சேர்ந்த முகேஷ்குமார், 40, உட்பட 15 பேரை, போலீசார் கைது செய்தனர். 94,760 ரூபாய் மற்றும் சீட்டு கட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.