/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கே.கே.நகரில் 15 கடை, 3 பைக் அகற்றம்
/
கே.கே.நகரில் 15 கடை, 3 பைக் அகற்றம்
ADDED : பிப் 25, 2025 01:16 AM

விருகம்பாக்கம், விருகம்பாக்கம், 128வது வார்டு, வேம்புலியம்மன் கோவில் தெருவில் தனியார் கல்லுாரி, பள்ளி மற்றும் மாநகராட்சி பூங்கா ஆகியவை அமைந்துள்ளன.
இதனால், இச்சாலையில் உள்ள நடைபாதை மற்றும் சாலையோரம், தள்ளுவண்டி கடைகள் அதிகம் உள்ளன. இதனால், இச்சாலையில் நெரிசல் நிலவி வந்தது.
அதேபோல், ஏ.வி.எம்., அவென்யூ பிரதான சாலையிலும், நடைபாதை கடை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்பட்டன.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், இரு சாலைகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை, நேற்று அகற்றினர். அத்துடன், சாலையோரம் பல நாட்களாக எடுக்கப்படாத மூன்று இருசக்கர வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.
அலட்சியம்
தேனாம்பேட்டை மண்டலத்தில் ராயப்பேட்டை மணிக்கூண்டு முதல் பட்டூல்லாஸ் சாலை வரை, நடைபாதை முழுதையும் ஆக்கிரமித்து, கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் அருகில் உள்ள மாலிற்கு வருவோரும், தங்களது வாகனங்களை நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி செல்வதால், அப்பகுதியில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல் படுகின்றனர் என புகார் எழுந்துள்ளது.
ராயப்பேட்டையில் அலட்சியம்
தேனாம்பேட்டை மண்டலத்தில் ராயப்பேட்டை மணிக்கூண்டு முதல் பட்டூல்லாஸ் சாலை வரை, நடைபாதை முழுதையும் ஆக்கிரமித்து, கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அருகில் உள்ள மாலிற்கு வருவோரும், தங்களது வாகனங்களை நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி செல்வதால், அப்பகுதியில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர் என புகார் எழுந்துள்ளது.