/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரின்ஸ் ஜுவல்லரியில் புதிதாக 150/ 150 சலுகை
/
பிரின்ஸ் ஜுவல்லரியில் புதிதாக 150/ 150 சலுகை
ADDED : ஆக 10, 2024 01:04 AM

சென்னை:பிரின்ஸ் ஜுவல்லரி, வாடிக்கையார்களுக்காக, 150/ 150 என்ற தனித்துவமிக்க சலுகையை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள், தங்கள் பழைய தங்க ஆபரணத்தை, புதிய தங்க நகைக்காக, 'எக்ஸ்சேஞ்ச்' செய்யும் போது கிராமுக்கு, 150 ரூபாய் கூடுதலாக பெறுவர்.
மேலும், அவர்கள் வாங்கும் அனைத்து புதிய தங்க நகைகளுக்கும் கிராமுக்கு, 150 ரூபாய் தள்ளுபடியை பெறலாம்.
இதுகுறித்து, பிரின்ஸ் ஜுவல்லரியின் இயக்குனர் ஜோசப் பிரின்ஸ் கூறியதாவது:
நேர்த்தியும், வேலைப்பாடும், நவீன யுக தன்மையையும் தன்னகத்தே கொண்டுள்ள, புத்தம் புதிய நகை தொகுப்பை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 150/ 150 சலுகை என்பது எங்களுடன் பயணித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் செலுத்தும் நன்றி.
புதிய வாடிக்கையாளர்கள் எங்கள் படைப்பையும், தனித்துவத்தையும் அறிந்து கொள்ள, இது ஒரு பொன்னான வாய்ப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சலுகை, எந்த ஜுவல்லரியில் வாங்கப்பட்ட அனைத்து பழைய தங்க நகைகளுக்கும் பொருந்தும் என்பதால், எக்ஸ்சேஞ்சுகளுக்கு, 100 சதவீத மதிப்பை அளிக்கும்.
இந்த சலுகை, பிரின்ஸ் ஜுவல்லரியின் சென்னை, கோவை, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ஷோரூம்களில் கிடைக்கும்.