/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை மாநிலக்கல்லுாரியில் 1.54 லட்சம் பேர் விண்ணப்பம்
/
சென்னை மாநிலக்கல்லுாரியில் 1.54 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை மாநிலக்கல்லுாரியில் 1.54 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை மாநிலக்கல்லுாரியில் 1.54 லட்சம் பேர் விண்ணப்பம்
ADDED : மே 31, 2024 12:39 AM
சென்னை தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் 62000 இளநிலை பட்டப்படிப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 3 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 2.47 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன.
இவற்றில் 1.54 லட்சம் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் வேறு கல்லுாரிகளுடன் சேர்த்து சென்னை மாநிலக் கல்லுாரியிலும் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் 53000 பேர் மாணவியர்.
சென்னை மாநிலக் கல்லுாரியில் பி.ஏ. - பி.எஸ்சி. மற்றும் பி.சி.ஏ. இளநிலை படிப்பில் 21 பாடப்பிரிவுகளில் தமிழ் ஆங்கில வழியில் 1500 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு ஒரு இடத்திற்கு 100 பேர் வீதம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அகில இந்திய தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வரிசையில் மாநிலக் கல்லுாரி உள்ளது.
தமிழக அரசின் இலவச திட்டங்கள் கல்வி உதவித்தொகை சலுகைகளும் இந்த கல்லுாரியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.