/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரிபுரா வாலிபரிடம் 18 கிலோ கஞ்சா பறிமுதல்
/
திரிபுரா வாலிபரிடம் 18 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : செப் 12, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்,
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்தாஸ், 34. பெருங்குடி, சீவரம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
இவர், வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து, இங்குள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பது தெரியவந்தது.
தரமணி காவல் உதவி கமிஷனரின் தனிப்படை போலீசார், நேற்று, அவர் வீட்டை சோதனை செய்தனர். அங்கு, 18 கிலோ கஞ்சா இருந்தது. சந்தன்தாசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கஞ்சா, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்தனர்.