/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடைநிலை ஆசிரியர் பணி விண்ணப்பிக்க வரும் 19 கடைசி
/
இடைநிலை ஆசிரியர் பணி விண்ணப்பிக்க வரும் 19 கடைசி
ADDED : ஜூலை 16, 2024 12:21 AM
சென்னை,சென்னை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிகளில், காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், தாற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன.
வளசரவாக்கம் பள்ளியில் இரண்டு ஆசிரியர், பெரும்பாக்கம் பள்ளியில் ஒரு ஆசிரியர் என, மொத்தம் மூன்று இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடத்திற்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பூதிய சம்பளமாக மாதம் 12,000 ரூபாய் வழங்கப்படும்.
தகுதியான நபர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலத்தில், வரும் 19ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று தெரிவித்தார்.

