/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 குழந்தை உயிரிழந்த தீ விபத்து: தாயும் பலி
/
2 குழந்தை உயிரிழந்த தீ விபத்து: தாயும் பலி
ADDED : செப் 09, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி முருகப்பா நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இப்பகுதியில், கடந்த 6ம் தேதி மூன்று இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. மளமளவென பற்றிய தீ, வீடுகளிலும் பரவியது.
இதில், பிரேம்குமார், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அவரது 1 மற்றும் 2 வயது மகன்களும் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டனர். இதில், குழந்தைகள் நவிலன், மிதுலன் இருவரும் பலியாகினர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா, நேற்று முன்தினம் உயிரிழந்தார். பிரேம்குமார் சிகிச்சையில் உள்ளார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.