தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ‘வக்கிர’ வாலிபர்கள் 2 பேர் கைது

‘வக்கிர’ வாலிபர்கள் 2 பேர் கைது

‘வக்கிர’ வாலிபர்கள் 2 பேர் கைது


ADDED : ஜூன் 05, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமாபுரம்: ராமாபுரத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று அதிகாலை வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணிடம், வாலிபர் ஒருவர் உதவி கேட்டுள்ளார். மொபைல் போனில் முகவரி பார்த்து சொல்லும்படி கூறியுள்ளார். ஆனால், போனில் ஆபாச வீடியோவை காண்பித்து, அப்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

ராமாபுரம் போலீசார் விசாரணையில், மதுரவாயல், பூத்தபேடு பகுதியைச் சேர்ந்த முருகன், 29, என்பது தெரிந்து, அவரை நேற்று கைது செய்தனர்.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, வீட்டு வேலை செய்து வரும் 34 வயது பெண்ணின் 13 வயது மகள், இம்மாதம் 3ம் தேதி, வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது வீட்டில் நுழைந்த, பெரம்பூர் ரமணா நகர் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். செம்பியம் போலீசார் விசாரித்து, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் சிவசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us