ADDED : ஏப் 27, 2024 12:38 AM
அ நிறம் | அளவு
ஆவடி, ஆவடி, ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர், 28. இவர், ஆவடி புதிய ராணுவ சாலையில், சாந்தி ஆட்டோ மொபைல்ஸ்' என்ற பெயரில், இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை 5:15 மணி அளவில், அங்கிருந்த ஊழியர்கள், 'யமஹா எப்.இசட்' பைக்கை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதன் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தீப் பிடித்து எரிந்தது.
அடுத்திருந்த 'யமஹா ரே' ஸ்கூட்டரும் தீக்கிரையானது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
