சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில், 31 வயது பெண் புகார் ஒன்றை அளித்தார். அதில் 'என் 15 வயது மகள் மற்றும் அவரது தோழிக்கு 'இன்ஸ்டாகிராம்' வலைதள பக்கம் வாயிலாக, ஆண் நண்பர் ஒருவர் பழக்கமானார்.
இதை அறிந்த சிறுமியரின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் தன் மகள் அவரது பெண் தோழியுடன் நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றனர்.
அதன்பின் தற்போது வரை வீடு திரும்பவில்லை' என, புகார் அளித்திருந்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்தனர். இதில், சிறுமியருக்கு அறிமுகமான ஆண் நண்பர் தருணின் மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது 'தன் பிறந்தநாள் என்பதால் எண்ணுார் வந்தனர். பிறகு மதியம், 2:00 மணியளவில் கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன்' எனக் கூறியுள்ளார். தொடர்ந்து சிறுமியர் எங்கு சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.