/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அவசர சிகிச்சை வசதி இல்லாததால் 2 உயிர்கள் பலி
/
அவசர சிகிச்சை வசதி இல்லாததால் 2 உயிர்கள் பலி
ADDED : செப் 04, 2024 01:26 AM
நீலாங்கரை:இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில், பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்ட, விபத்து சிகிச்சை மருத்துவமனை, சமீபத்தில் மூடப்பட்டது.
இதன் அருகில், 24 மணி நேரம் செயல்படும், 100 படுக்கை வசதி உடைய மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. ஆனால், அவசர சிகிச்சை வசதி இல்லை. விபத்து உள்ளிட்ட அவசர நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல், பலர் பாதிக்கப்படுகின்றனர்.
நேற்று முன்தினம், ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு பங்களா குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன், அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தான்.
சிறுவனை மீட்ட பெற்றோர், உடனடியாக ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவு இல்லாததால், உடனே இறந்தார்.
இந்நிலையில் நேற்று ஒரு மூதாட்டி அவசர சிகிச்சைக்காக, ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம் அடைந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த கூறி, கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்த போலீசார், அவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனர். மேலும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்களிடம் உறுதி அளித்தனர்.