ADDED : ஜூன் 01, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவில் நேற்று முன்தினம், ஐந்து பேர் போதையில் படுத்திருந்தனர்.
ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும், மூன்று பேர் அங்கிருந்து ஓடினர். மற்ற இருவரை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் படுத்திருந்த இடத்தில், 1 அடி நீளம் கொண்ட நான்கு கத்திகள் இருந்தன. இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பை சேர்ந்த தவான், 23, சேலையூர், மசூதி காலனியை சேர்ந்த சிவகுமார், 18, என்பது தெரியவந்தது. இருவரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.