/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண் சரிவில் சிக்கி 2 பேர் படுகாயம்
/
மண் சரிவில் சிக்கி 2 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 01, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை:கொட்டிவாக்கம், ஜெகநாதன் தெருவில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடக்கிறது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வையாபுரி, 52, சிவபெருமான், 50, ஆகியோர், நேற்று, பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஐந்து அடி ஆழத்தில் பள்ளம் தோண்டும்போது, ஒரு பக்கத்தில் இருந்து மண் சரிந்து, இருவர் மீதும் விழுந்தது. இதில், இடுப்பு வரை மண் சரிந்ததால், வெளியேற முடியாமல் திணறினர்.
சக ஊழியர்கள், போலீசார் மற்றும் பகுதிமக்கள் உதவியுடன், இருவரையும் மீட்டனர். கை, விலா, கால்களில் பலத்த காயம் அடைந்த இருவருக்கும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.