/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் நுாதன வழிப்பறி பெண் உட்பட 2 பேர் பிடிபட்டனர்
/
கோயம்பேடில் நுாதன வழிப்பறி பெண் உட்பட 2 பேர் பிடிபட்டனர்
கோயம்பேடில் நுாதன வழிப்பறி பெண் உட்பட 2 பேர் பிடிபட்டனர்
கோயம்பேடில் நுாதன வழிப்பறி பெண் உட்பட 2 பேர் பிடிபட்டனர்
ADDED : ஆக 05, 2024 01:10 AM
கோயம்பேடு, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்தவர் சிவராமன், 28. இவர், வில்லிவாக்கத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 2ம் தேதி இரவு ஊருக்கு செல்ல, கோயம்பேடு வந்தார். அங்குள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்திற்கு சென்றார். அங்கிருந்து வெளியே வந்து, காளியம்மன் கோவில் சாலை சந்திப்பில் நின்ற இரு பெண்களிடம் பேச்சு கொடுத்தார். அப்போது, அங்கு வந்த இருவரில் ஒருவர், 'என் மனைவியிடம் ஏன் பேசுகிறாய்?' என, கேட்டு தகராறு செய்து, பிளேடால் சிவராமன் கன்னத்தில் வெட்டினார். பின், அவரிடம் இருந்த 3,500 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர்.
இது குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரித்தனர்.
இதில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள, செங்குன்றத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, 51, அவரது மகள் சந்தியா, 21, திருவேற்காடைச் சேர்ந்த ராஜேஷ், 30, ஜெய் நகரைச் சேர்ந்த கனி என்ற சேட்டா, 28, ஆகியோர் என்பது தெரியவந்தது.
விசாரணையில், 'மகாலட்சுமி மற்றும் சந்தியா ஆகியோர், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக வரும் சபல நபர்களை மடக்கி பேச்சு கொடுப்பர்.
அதன்பின், அங்கு வரும் சேட்டா மற்றும் ராஜேஷ் ஆகியோர், அவர்களை மிரட்டி, தாக்கி நகை, பணம் பறிப்பது வாடிக்கை. பலரும் பெயர் கெட்டுப்போகும் என புகார் அளிப்பதில்லை' என தெரிய வந்தது.
சந்தியா மற்றும் சேட்டாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மகாலட்சுமி மற்றும் ராஜேைஷ தேடி வருகின்றனர்.